» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

எஸ்பிஐ வங்கியில் மாதம் ரூ.48,480 சம்பளத்தில் 2964 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு!

வியாழன் 22, மே 2025 5:44:22 PM (IST)

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் நிரப்பப்பட உள்ள 2,964 வட்டார அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில்(பாரத ஸ்டேட் வங்கி) நிரப்பப்பட உள்ள 2,964 வட்டார அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்தும் வரும் மே 29 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: CRPD/ CBO/2025-26/03

பணி: Circle Based Officers(வட்டார அலுவலர்)

காலியிடங்கள்: 2,964(தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு 120 காலியிடங்கள்)

சம்பளம்: மாதம் ரூ.48,480

தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஒருங்கிணைந்த இரட்டைப் பட்டம் உள்பட மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு சமமான தகுதியும் பெற்றிருக்க வேண்டும். பொறியியல், மருத்துவம், கணக்கியல் அல்லது பட்டயக் கணக்கியலில் துறையில் பட்டம் பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி அனுபவம்: வணிக வங்கி அல்லது பிராந்திய கிராமப்புற வங்கிகளில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் மொழியில், எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30.4.2025 தேதியின்படி 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதர அனைத்து பிரிவினரும் ரூ.750 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 29.5.2025


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory