» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கியில் பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு!

திங்கள் 25, நவம்பர் 2024 5:21:39 PM (IST)

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் 170 சீனியர் கஸ்டமர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு நவ.27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி இந்தியா முழுவதும் 509 முழு கிளைகளையும், 12 பிராந்திய அலுவலகங்களையும், பதினொரு விரிவாக்க கவுண்டர்களையும், 1094 தானியங்கி டெல்லர் இயந்திரங்களையும் (ஏடிஎம்) கொண்டுள்ளது. இந்த வங்கி இந்தியா முழுவதும் தனது கிளைகளை விரிவுபடுத்தி வருகிறது. 

இந்நிலையில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள சீனியர் எக்ஸிகியூட்டிவ் சர்வீஸ் (SCSE) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதில், சீனியர் கஸ்டமர் எக்ஸிகியூட்டிவ் - மொத்தம் 170 பணியிடங்கள் நிரப்பட உள்ளது. ஆந்திரா, குஜராத், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பணியிடங்கள் உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருப்பது முக்கியம். 

விண்ணப்பதாரர்கள் 26 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் மாதம் ரூ.32,000 முதல் ரூ.72,061 வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு என இரண்டு கட்ட தேர்வுகளுக்கு பிறகு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் தேர்வு நாடு முழுவதும் உள்ள சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடைபெறும். 

தகுதியான விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்ப கட்டணம் ரூ.1,000-ஆகும். ஆன்லைன் வழியாக கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 27ம் தேதியாகும். ஆன்லைன் வழியான எழுத்து தேர்வு டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

Bala anishaDec 4, 2024 - 09:53:28 PM | Posted IP 172.7*****

I am interested

Haritha . SNov 27, 2024 - 11:23:50 AM | Posted IP 172.7*****

Accounts

S. HarithaNov 27, 2024 - 11:22:40 AM | Posted IP 162.1*****

Accounts

D.shinesimiNov 26, 2024 - 04:07:43 PM | Posted IP 162.1*****

Good job

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory