» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

ரயில்வேயில் 7,951 காலி பணியிடங்கள்; ஜூலை 30முதல் விண்ணப்பிக்கலாம்!

சனி 27, ஜூலை 2024 5:30:31 PM (IST)

ரயில்வே துறையில் 7 ஆயிரத்து 951 பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் 30.7.2024 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 29.8.2024 ஆகும். 

இந்திய ரயில்வேயில் பல்வேறு துறைகள் உள்ளன. இந்த துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அவ்வப்போது அறிவிப்புகளை ரயில்வே தேர்வு ஆணையம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ரயில்வேயில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 951 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, ரயில்வேயில் ஜூனியர் என்ஜினீயர், டிபோர்ட் மெட்டிரியல் சூப்பரண்டெண்ட் அண்ட் கெமிக்கல் அண்ட் மெட்டலுர்ஜிகல் உதவியாளர் ஆகிய பணிகளுக்கு 7 ஆயிரத்து 934 காலி இடங்களை நிரப்பவும், கெமிக்கல் சூப்பர்வைசர் (கோரக்பூர் மட்டும்) பணிகளுக்கு 17 காலி இடங்களை நிரப்பவும் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

18 முதல் 36 வயதிற்கு உள்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ரயில்வேயில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 951 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.

தேர்வில் பங்கேற்க தகுதியான நபர்கள் 30.7.2024 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 29.8.2024 ஆகும். விண்ணப்ப கட்டணத்தை செலுத்த கடைசி நாள் 29.8.2024. விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ள 30.8.2024 முதல் 8.9.2024 வரை அவகாசம் வழங்கப்படுகிறது. தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று ரயில்வே தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து

P.AppavuAug 8, 2024 - 02:38:42 PM | Posted IP 172.7*****

Railway

ChithraAug 7, 2024 - 05:47:48 PM | Posted IP 162.1*****

Qualification

ZafrullahAug 3, 2024 - 11:16:39 AM | Posted IP 162.1*****

Velai kidaicha nalla irukum

p.Vijaya laksmiJul 31, 2024 - 11:23:50 AM | Posted IP 172.7*****

Railway exam

VinothkumarJul 30, 2024 - 10:48:12 AM | Posted IP 162.1*****

Thank you for asking this question. However, I am not very well acquainted with this job. But I can assure you I will definitely do some research around this.

G SelvinJul 30, 2024 - 10:19:08 AM | Posted IP 162.1*****

Thank you for asking this question. My desire is to work in a railway station and I promise to do it in the most appropriate way

VinothkumarJul 29, 2024 - 09:37:38 PM | Posted IP 162.1*****

Thank you for asking this question. However, I am not very well acquainted with this job. But I can assure you I will definitely do some research around this.

Mounika RJul 28, 2024 - 08:47:58 AM | Posted IP 172.7*****

Nothing

Sanjai gandhiJul 27, 2024 - 06:38:35 PM | Posted IP 162.1*****

Good

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory