» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
வியாழன் 7, டிசம்பர் 2023 7:57:49 PM (IST)
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 13-ந்தேதிக்கு நீட்டிப்பு செய்து தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
2023-24-ம் ஆண்டுக்கான பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய பயிற்றுனர் காலிப் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த இருக்கிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (வியாழக்கிழமை) கடைசி நாளாக இருந்தது.
இந்த நிலையில் மிக்ஜம் புயல் மழையின் காரணமாக இந்த பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை 7-ந்தேதியில் இருந்து 13-ந்தேதிக்கு நீட்டிப்பு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அவகாசம் கேட்டும் சிலர் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் வருகிற 14 மற்றும் 15-ந்தேதிகளில் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டு இருப்பதாகவும் தேர்வு வாரியம் அறிவித்து இருக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அஞ்சல்துறை வங்கியில் 348 பணி இடங்கள்: அக்.29க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 23, அக்டோபர் 2025 4:09:02 PM (IST)

7,565 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள்: எஸ்.எஸ்.சி., அறிவிப்பு!
வியாழன் 25, செப்டம்பர் 2025 12:48:27 PM (IST)

தமிழக காவல்துறையில் 3665 பணி இடங்கள் : செப்.21 வரை விண்ணப்பிக்கலாம்..!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 12:55:39 PM (IST)

ரயில்வேயில் 434 காலி பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
புதன் 17, செப்டம்பர் 2025 12:27:25 PM (IST)

நீதிமன்ற அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
புதன் 13, ஆகஸ்ட் 2025 3:34:18 PM (IST)

தமிழக அரசு துறைகளில் 645 இடங்கள்: ஆக.13வரை விண்ணப்பிக்கலாம்!
சனி 9, ஆகஸ்ட் 2025 4:02:04 PM (IST)


