» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

26,146 காவலர் பணியிடங்கள்: டிச.31க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

வியாழன் 30, நவம்பர் 2023 4:07:28 PM (IST)

26,146 காவலர் பணியிடங்களுக்கு டிச.31 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு எஸ்எஸ்சி அறிவித்துள்ளது.

மத்திய ஆயுதப்படைப் படைகள் மற்றும் ரைபிள்மேன், அஸ்ஸாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் 26146 காவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கான வரும் 2024 ஆம் ஆண்டு பிப்பரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறுகிறது. இதற்கு தகுதியானவர் இந்திய இளைஞர்களிடம் இருந்து டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) அறிவித்துள்ளது.

இது குறித்து எஸ்எஸ்சி வெளியிட்ட அறிவிக்கையில், மத்திய ஆயுதப்படைகள், எஸ்எஸ்எப் மற்றும் ரைபிள்மேன், அஸ்ஸாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் காலியாக உள்ள 26,146 காவலர் (பொதுப்பணி) பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான போட்டித் தோ்வு, 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில்  நடைபெறவுள்ளது.

இந்தத் தோ்வுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நல்ல உடற்தகுதி உள்ளவர்கள் டிசம்பர் 31-ஆம் தேதி வரை https:// ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.  இந்த பதவிகளுக்கு கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு, உடற்தகுதி மற்றும் உடல்திறன், மருத்துவ பரிசோதனை தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

இந்தப் பணியிடத்துக்கு 1.7.2023 தேதியின்படி பொதுப் பிரிவினா் 18 முதல் 23 வயது வரையிலும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில்லை தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

தோ்வுக்கு விண்ணப்பிக்கும்போது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். தோ்வுக் கட்டணமாக பொதுப் பிரிவினா் ரூ.100. தோ்வுக்கு விண்ணப்பிப்பவா்கள் கூடுதல் தகவல்களை, https://ssc.nic.in.என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory