» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
ரிசர்வ் வங்கியில் ரூ.55,700 சம்பளத்தில் வேலை: அக்.4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!!
வியாழன் 28, செப்டம்பர் 2023 5:32:57 PM (IST)
இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 450 உதவியாளர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து வரும் அக்டோர் 4 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: உதவியாளர் (Assistant)
காலியிடங்கள்: 450
சம்பளம்: மாதம் ரூ.20,700 - ரூ.55,700
வயதுவரம்பு: 1.9.2023 தேதியின்படி 20 முதல் 20 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகைகள் வழங்கப்படும்.
தகுதி: குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ரிசர்வ் வங்கியால் நடத்தப்படும் நாடு தழுவிய போட்டித் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வானது இரண்டு கட்டங்களாக இருக்கும், அதாவது முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வுகளைத் தொடர்ந்து மொழித் திறன் தேர்வு நடைபெறும். முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
முதல்நிலை எழுத்துத் தேர்வு தோராயமாக 21.10.2023, 23,10.2023 தேதிகளிலும், முதன்மைத் தேர்வு 2.12.2023 தேதி நடைபெறலாம்.
தமிழ்நாட்டி தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்,
இரண்டாம் கட்டம் தேர்வு சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர் போன்ற நகரங்களில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் ரூ.50 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.450 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 4.10.2023
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
வியாழன் 7, டிசம்பர் 2023 7:57:49 PM (IST)

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு : நேர்முகத் தேர்வு தேதி அறிவிப்பு!
வியாழன் 7, டிசம்பர் 2023 5:30:15 PM (IST)

26,146 காவலர் பணியிடங்கள்: டிச.31க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
வியாழன் 30, நவம்பர் 2023 4:07:28 PM (IST)

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் 496 இடங்கள்: நவ.30 கடைசி நாள்
செவ்வாய் 28, நவம்பர் 2023 5:35:59 PM (IST)

இந்திய அஞ்சல் துறையில் 1,899 பணியிடங்கள் : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 24, நவம்பர் 2023 5:27:16 PM (IST)

தமிழகத்தில் 2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணி இடங்களுக்கான தேர்வு அறிவிப்பு!
புதன் 25, அக்டோபர் 2023 3:42:25 PM (IST)
