» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

ரூ.1,16,600 சம்பளத்தில் ஆராய்ச்சி உதவியாளர் பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

வியாழன் 20, ஜூலை 2023 11:06:28 AM (IST)

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கு வரும் 25 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கேட்டுக்கொண்டுள்ளது.

பணி: ஆராய்ச்சி உதவியாளர்(புள்ளியியல்) - 1

பணி: ஆராய்ச்சி உதவியாளர்(பொருளாதாரம்) - 1

பணி: ஆராய்ச்சி உதவியாளர்(புவியியல்) - 1

பணி: ஆராய்ச்சி உதவியாளர்(சமூகவியல்) - 1

சம்பளம்: மாதம் ரூ.36,200 - 1,33,100

பணி:  ஆராய்ச்சி உதவியாளர்(மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறை) - 1

சம்பளம்: மாதம் ரூ.36,200 - 1,16,600

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்கும்  பொது பிரிவினருக்கு 18 முதல 32க்குள்ளும், இதர பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பு கிடையாது. 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்களஅ தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.exams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 9.9.2023

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.7.2023


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory