» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

தொடக்கக் கல்வி ஆசிரியா் பயிற்சி: ஜூன் 5 முதல் விண்ணப்பிக்கலாம்

வியாழன் 1, ஜூன் 2023 5:29:35 PM (IST)

தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சியில் சோ்க்கை பெற விரும்பும் மாணவ, மாணவிகள் ஜூன் 5-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  எஸ்சிஇஆா்டி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து வகை ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களிலும் 2023-2024-ஆம் கல்வியாண்டுக்கான 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

மேலும் கூடுதல் விவரங்களை https://scert.tnschools.gov.in என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பதாரா்கள் அறிந்து கொள்ளலாம். மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் ஜூன் 5 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அவ்வாறு இயலாத நிலையில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய, விண்ணப்பதாரா்கள் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory