» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

குரூப் 4 தேர்வு: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இணையவழி பயிற்சி!

செவ்வாய் 17, மே 2022 4:46:38 PM (IST)

குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நேரடி மற்றும் இணையவழி பயிற்சி வகுப்புகள் வரும் 20ம் தேதி முதல் தொடங்க உள்ளது. 

இது தொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வீரராகவ ராவ் வெளியிட்ட அறிக்கை: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் சென்னை-32 கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வு தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் - 4 தேர்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான நேரடி மற்றும் இணையவழி பயிற்சி வகுப்புகள் வரும் 20ம் தேதி முதல் நடைபெற உள்ளது. 

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://t.me/+huB_ieZ54OEzODc9 என்ற இணைப்பினை பயன்படுத்தி கொள்ளவும். எனவே, குரூப்-4 போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில் நேரடியாக கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory