» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

பாரத ஸ்டேட் வங்கியில் 1226 அதிகாரிகள் பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு!

வெள்ளி 17, டிசம்பர் 2021 11:27:23 AM (IST)

பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இளநிலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். CRPD/CBO/2021-22/19

பணி: Circle Based Officer

காலியிடங்கள்: 1226

சம்பளம்: மாதம் ரூ.36,000 - 63,840

தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.12.2021 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி 2022 இல் நடைபெறும். எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் 12.01.2022 தேதிக்கு பின்னர் இணையதளத்தில் வெளியிடப்படும்.

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை, திருநெல்வேலி தேர்வு நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.750 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:  இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.12.2021

மேலும் விவரங்கள் அறிய https://ibpsonline.ibps.in/sbircbonov21/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Thoothukudi Business Directory