» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
டி.என்.பி.எஸ்.சி. செயலாளராக உமா மகேஸ்வரி நியமனம்
வியாழன் 17, ஜூன் 2021 11:09:16 AM (IST)
டி.என்.பி.எஸ்.சி. செயலாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக சுதனும், செயலாளராக நந்தகுமாரும் இருந்தனர். புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 13-ந்தேதி 54 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதில், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த சுதனும் மாற்றப்பட்டார்.
அதேபோல் செயலாளராக இருந்த நந்தகுமார், ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டு, தற்போது அவர் பள்ளிக்கல்வி ஆணையராக உள்ளார். இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. செயலாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக கிரண் குராலாவும், செயலாளராக பி.உமா மகேஸ்வரியும் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்பிஐ வங்கியில் 996 காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.23!
சனி 6, டிசம்பர் 2025 12:02:37 PM (IST)

அஞ்சல்துறை வங்கியில் 348 பணி இடங்கள்: அக்.29க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 23, அக்டோபர் 2025 4:09:02 PM (IST)

7,565 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள்: எஸ்.எஸ்.சி., அறிவிப்பு!
வியாழன் 25, செப்டம்பர் 2025 12:48:27 PM (IST)

தமிழக காவல்துறையில் 3665 பணி இடங்கள் : செப்.21 வரை விண்ணப்பிக்கலாம்..!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 12:55:39 PM (IST)

ரயில்வேயில் 434 காலி பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
புதன் 17, செப்டம்பர் 2025 12:27:25 PM (IST)

நீதிமன்ற அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
புதன் 13, ஆகஸ்ட் 2025 3:34:18 PM (IST)


