» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்ட வருவாய் துறையில் 25 பணியிடங்கள்
வெள்ளி 14, மே 2021 7:38:40 AM (IST)
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் அறிக்கை: தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் ஆட்சியர் அலுவலகம், அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் மசால்ஜி 10, இரவுக் காவலர் 12, தோட்டக்காரர் 1, துப்புரவு பணியாளர் 2 ஆகிய நிலையில் மொத்தம் காலியாக உள்ள 25 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தகுதியான நபர்களை அவுட் சோர்சிங் மூலம் அளிக்க, அரசு விதிமுறைகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட, அரசின் அங்கீகாரம் பெற்ற தகுதி வாய்ந்த முகமை (ஏஜென்சி)கள், முத்திரையிடப்பட்ட கவரில் உரிய விண்ணப்பத்தை முகமை அங்கீகார நகல், ஊதிய ஒப்பந்த புள்ளி விவரங்களுடன் 31.05.2021-க்கு முன்பாக ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தூத்துக்குடி என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
கவரின் மேல்புறம் மசால்ஜி / இரவுக்காவலர் ஆவுட் சோர்சிங் விண்ணப்பம் என குறிப்பிட வேண்டும். 31.05.2021-க்கு பின்னர் வரப்பெறும் எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஒப்பந்த தாரர்கள் முன்னிலையில் 04.06.2021 அன்று ஒப்பந்த புள்ளி கள் திறக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்பிஐ வங்கியில் 996 காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.23!
சனி 6, டிசம்பர் 2025 12:02:37 PM (IST)

அஞ்சல்துறை வங்கியில் 348 பணி இடங்கள்: அக்.29க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 23, அக்டோபர் 2025 4:09:02 PM (IST)

7,565 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள்: எஸ்.எஸ்.சி., அறிவிப்பு!
வியாழன் 25, செப்டம்பர் 2025 12:48:27 PM (IST)

தமிழக காவல்துறையில் 3665 பணி இடங்கள் : செப்.21 வரை விண்ணப்பிக்கலாம்..!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 12:55:39 PM (IST)

ரயில்வேயில் 434 காலி பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
புதன் 17, செப்டம்பர் 2025 12:27:25 PM (IST)

நீதிமன்ற அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
புதன் 13, ஆகஸ்ட் 2025 3:34:18 PM (IST)


