» செய்திகள் - விளையாட்டு » மருத்துவம்

தொப்பையா ? இனி கவலை வேண்டாம் – வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க



உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் தினமும் காலை 200 மி.லி. வெண்பூசணி சாறு பருகலாம். 

தேவையான பொருட்கள்

பூசணிக்காய் – அரை கிலோ
தேன் – 2 தேக்கரண்டி
தண்ணீர் – 300 மி.லி.

செய்முறை : வெண்பூசணியின் மேல் தோலை நீக்கி விட்டு சிறுதுண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்து தண்ணீர் கலந்து வடிகட்டவும்.  அதில் தேன் கலந்து பருக வேண்டும்.

இந்த பூசணி சாறு உடலில் உள்ள அமிலத்தன்மையை நீக்கும். உடல் சூட்டாலும், பித்தத்தாலும் உண்டாகும் வயிற்று புண், வாய்ப்புண், மூலம், சிறுநீர் சம்பந்தமான நோய்கள், பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் போன்றவைகளுக்கு சிறந்த மருந்து. இந்த சாறு ரத்தத்தில் காரத்தன்மையை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் தினமும் காலை 200 மி.லி. வெண்பூசணி சாறு பருகலாம். புற்றுநோய் சிகிச்சை மேற்கொள்பவர்கள் இந்த சாறு பருகினால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். உடல் சூடு குறையும். உடலில் உள்ள திசுக்கள் புத்துணர்ச்சி பெறும். சர்க்கரை நோயாளிகள் இந்த சாற்றில் உப்பு மற்றும் சீரகத்தூள் கலந்து பருக வேண்டும்.


மக்கள் கருத்து

RAJKUMARJan 5, 2018 - 07:32:51 AM | Posted IP 115.2*****

SUPER

BALAKUMARமே 4, 2016 - 06:48:59 PM | Posted IP 220.2*****

SUPER

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

CSC Computer Education

Nalam Pasumaiyagam



Black Forest Cakes




Thoothukudi Business Directory