» சினிமா » செய்திகள்
அமெரிக்கா- ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம்: வைரமுத்து வரவேற்பு
புதன் 8, ஏப்ரல் 2026 11:38:50 AM (IST)
நாகரிகத்தின் பிறப்பிடமாகிய ஈரான் அநாகரிகத்தால் அழியக் கூடாது என்று போர் நிறுத்தத்திற்கு வைரமுத்து வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா- ஈரான் இடையே 2 வாரம் போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரு வாரத்திற்கு ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைப்பதாக அமெரிக்காவும், ஹார்மூஸ் நீரிணை வழியே அனைத்து நாட்டின் கப்பல்களும் பயணிக்க அனுமதிப்பதாக ஈரானும் அறிவித்துள்ளது.
இதனிடையே அமெரிக்கா- ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இப்படியே நீடிக்கட்டும்
தற்காலிகப் போர்நிறுத்தம்
நிரந்தரமாகட்டும்
ஹோர்முஸ் நீரிணையும்
அகந்தையால் அடைக்கப்பட்ட
திறந்தே இருக்கட்டும்
நாகரிகத்தின்
பிறப்பிடமாகிய ஈரான்
அநாகரிகத்தால்
அழிந்துபடக் கூடாது
உலகத்தின் எந்தவிளிம்பில்
போர் நிகழ்ந்தாலும்
இன்னொரு விளிம்பில்
எதிர்வினை இருக்கும்
டென்மார்க்கில் ஒரு பசு
பூச்சி மருந்தடித்த
புல்லைத் தின்றால்
ஆஸ்திரேலியாவில்
சாக்லேட் தின்னும் குழந்தை
சாகக் கிடக்கும்
முடிவுக்கு வரட்டும்
யுத்தம்
ஏவுகணைகளையும்
ட்ரோன்களையும்விடவும்
பேச்சுவார்த்தைகள்
வலிமையானவை
தோட்டாக்களில்
தொடங்கிய போர்
சொற்களில் முடியட்டும்
கல்லெறிந்து விரட்டுங்கள்
கழுகுகளை;
தானியமிட்டுக் கூப்பிடுங்கள்
புறாக்களை
இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

100 மில்லியன் பார்வையாளர்கள்: யூடியூப்பில் கூலி படத்தின் பவர்ஹவுஸ் பாடல் புதிய சாதனை!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:05:45 PM (IST)

இறுதி கட்டத்தை எட்டிய ஜன நாயகன் சென்சார் பணிகள்: மே 8-ல் ரிலீஸ்? - ரசிகர்கள் உற்சாகம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:03:15 PM (IST)

சல்மான் கான் - நயன்தாரா கூட்டணியின் புதிய படம்: ஈகைத் திருநாளுக்கு வெளியீடு!
சனி 25, ஏப்ரல் 2026 11:55:40 AM (IST)

ஜனநாயகன் திரைப்படம் லீக் விவகாரம்: படத்தொகுப்பாளர் இடை நீக்கம்!
சனி 25, ஏப்ரல் 2026 11:09:09 AM (IST)

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? - கமல்ஹாசன் பதில்
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:06:07 PM (IST)

ஜனாதிபதி விருந்தில் நடிகை பிரியங்கா மோகன்: தென் கொரிய அதிபருடன் சந்திப்பு!
புதன் 22, ஏப்ரல் 2026 4:49:10 PM (IST)

