» சினிமா » செய்திகள்
பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்
ஞாயிறு 13, ஜூலை 2025 11:05:42 AM (IST)
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83.
தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பத்மஸ்ரீ மற்றும் நந்தி விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். விஜயவாடா கிழக்குத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.சிலகாலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பால் அவதிப்பட்டு வந்தார். சில தினங்களுக்கு முன்பு மெலிந்த உடலுடன் இருக்கும் அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளானது. இந்த நிலையில் 83 வயதாகும் கோட்டா சீனிவாச ராவ் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த்: படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்!
செவ்வாய் 9, ஜூன் 2026 11:55:56 AM (IST)

மாஸ்ட்ரோ இளையராஜாவுடன் மாரி செல்வராஜ் புதிய கூட்டணி?
திங்கள் 25, மே 2026 5:04:55 PM (IST)

பிரேம்குமார் - பகத் பாசில் இணையும் புதிய த்ரில்லர் படம்: பூஜையுடன் தொடக்கம்!
வெள்ளி 22, மே 2026 4:51:58 PM (IST)

ஜெயிலர் 2 ரிலீஸ் தேதியை மாற்றிய சன் பிக்சர்ஸ்!
வியாழன் 21, மே 2026 5:12:31 PM (IST)

கருப்பு படத்தில் சர்ச்சை காட்சி: இளையராஜாவிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தது படக்குழு!
செவ்வாய் 19, மே 2026 4:00:36 PM (IST)

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் ஆற்றில் குதித்து தற்கொலை! - திரையுலகினர் அதிர்ச்சி!
திங்கள் 18, மே 2026 10:31:06 AM (IST)

