» சினிமா » செய்திகள்

நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார்!

செவ்வாய் 26, மார்ச் 2024 5:16:01 PM (IST)

வடக்குபட்டி ராமசாமி உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள  நகைச்சுவை நடிகர்  சேஷூ மாரடைப்பால் காலமானார். 

தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட்ட நடிகராக இருந்தவர் சேஷு. லொள்ளு சபா மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் பல படங்களில் கவனம் ஈர்க்கும் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார். குறிப்பாக, சந்தானம் படங்களில் தவறாமல் இருக்கும் நடிகர் என்கிற அடையாளத்துடன் இருந்தவர்.

சந்தானத்துடன் பாரிஸ் ஜெயராஜ், ஏ ஒன், வடக்குப்பட்டி ராமசாமி படங்களில் நடித்து பலரையும் சிரிக்க வைத்தார் சேஷு. பாரிஸ் ஜெயராஜ் படத்தில் போலி புரோகிதரான சேஷு, தன் உடல்மொழியிலேயே கண்ணீர் வரும் அளவிற்கு சிரிக்க வைத்து தன் திறமையைக் காட்டினார்.

சந்தானம் நடிப்பில் வெளியான வடக்குபட்டி ராமசாமி படத்தில் சேஷூ நடித்த கதாபாத்திரம் அதிகம் அளவில் பேசப்பட்டது. கடந்த 15ஆம் தேதி உடல்நல குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேஷூ, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவு திரையுலகை சேர்ந்த பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நகைச்சுவை நடிகர் ஷேஷூ நிறைய நல்ல செய்து இருக்கிறார். பல பேருக்கு உதவி செய்து இருக்கிறார். பல குழந்தைகளை படிக்க வைத்து இருக்கிறார். அவரே கஷ்டமான சூழ்நிலையில் தான் இருந்தாரு, அப்படி இருந்தாலும். மற்றவர்களிடம் வாங்கியாவது, இல்லை என்று கேட்டு வருபவர்களுக்கு அவர் உதவி செய்து விடுவார். பல ஏழை எளிய பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து இருக்கிறார் என்று நடிகர் அமுதவாணன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory