» சினிமா » செய்திகள்
கேரளாவில் நடிகர் விஜய்: ரசிகர்கள் உற்சாகம்!!
செவ்வாய் 19, மார்ச் 2024 11:21:44 AM (IST)

‘தி கோட்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக 14 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளா சென்ற நடிகர் விஜய்-க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கடைசியாக விஜய் கடந்த 2011-ம் ஆண்டு இயக்குநர் சித்திக் இயக்கத்தில் வெளியான ‘காவலன்’ படத்தின் படப்பிடிப்புக்காக 2010-ம் ஆண்டு நடிகர் விஜய் கேரளா சென்றார். அதன் பிறகு அவர் எந்தப்பபடத்தின் படபிடிப்புக்காகவும் கேரளா செல்லவில்லை. தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் கேரளாவின் திருவனந்தபுரத்தில் படமாக்கப்பட உள்ளது. இதனால், 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் கேரளா சென்றடைந்தார். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். மேலும் அவர் பயணிக்கும் காரை ரசிகர்கள் பின்தொடர்ந்து செல்லும் காட்சிகளும் வைரலாகி வருகின்றன. கிட்டத்தட்ட 4 நாட்களுக்கும் மேலாக கேராளவில் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலர் தினம் கொண்டாடிய திரை நட்சத்திரங்கள்
சனி 15, பிப்ரவரி 2025 3:36:49 PM (IST)

ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகரா?- ராம்கோபால் வர்மா சர்ச்சை பேச்சு
வியாழன் 13, பிப்ரவரி 2025 5:35:59 PM (IST)

விஜய் மீது முட்டையை வீச திட்டம் : ரசிகர்களுக்கு ரஜினி கண்டனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 5:54:19 PM (IST)

விடாமுயற்சி ரிலீஸ் : அஜித் ரசிகர்கள் உற்சாகம்!
வியாழன் 6, பிப்ரவரி 2025 3:25:22 PM (IST)

சர்வதேச திரைப்பட விழாவில் ராமின் பறந்து போ!
வெள்ளி 31, ஜனவரி 2025 5:27:44 PM (IST)

பராசக்தி டைட்டிலை யாரும் பயன்படுத்தக் கூடாது - நேஷனல் பிக்சர்ஸ் எச்சரிக்கை
வெள்ளி 31, ஜனவரி 2025 11:31:50 AM (IST)
