» சினிமா » செய்திகள்

குட் பேட் அக்லி: அஜித்தின் 63-வது படத்தின் பெயர் அறிவிப்பு

வெள்ளி 15, மார்ச் 2024 11:14:12 AM (IST)ஆதிக் ரவிச்சந்திரன்  இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

அஜித்தின் 63-வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மைதிரி மூவீ மேக்கர்ஸ் தயாரிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வருகிற ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், 2025 பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என்று போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் படத்துக்கு கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ‘வில்லன்’ மற்றும் ‘ரெட்’ ஆகிய படங்களுக்கு ஆங்கில தலைப்புகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அதன் பிறகு, ’அட்டகாசம்’, ‘பரமசிவன்’, ‘கிரீடம்’, ‘அசல்’, ‘மங்காத்தா’, ‘ஆரம்பம்’, ‘வீரம்’, ‘விவேகம்’, ‘வலிமை’, ‘துணிவு’ என ஆங்கில தலைப்பை தவிர்த்து வந்தார்.  இந்தச் சூழலில் தற்போது 22 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் தனது படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory