» சினிமா » செய்திகள்
திரைப்பட இயக்குநர் சூரியகிரண் காலமானார்..!!
திங்கள் 11, மார்ச் 2024 5:16:42 PM (IST)
திரைப்பட இயக்குநர் சூரியகிரண் (48) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
மௌன கீதங்கள், படிக்காதவன் உள்ளிட்ட தமிழ், தெலுங்கு என 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சூரியகிரண் நடித்துள்ளார். சூரியகிரண் என்ற பெயரில் தெலுங்கில் சத்யம் படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். மேலும், சத்யம், தானா 51, பிரம்மாஸ்திரம், ராஜுபாய், அத்தியாயம் 6 போன்ற தெலுங்கு படங்களை இயக்கி உள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு நடிகை காவேரியை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதா இவரது தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சூரியகிரண், கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சென்னையில் இன்று காலமானார். இவர் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள அரசி படத்தை சூரியகிரண் இயக்கியுள்ளார்.