» சினிமா » செய்திகள்

ஆஸ்கர் விழாவில் நிர்வாணமாக மேடையேறிய ஜான் சீனா! காரணம் என்ன...?

திங்கள் 11, மார்ச் 2024 3:45:20 PM (IST)ஆஸ்கர் விழாவில் நடிகர் ஜான் சீனா நிர்வாணமாக மேடையேறிய சம்பவம் பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

96 வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. அதில் கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் சிறந்த இயக்குநர், நடிகர் உள்பட 7 விருதுகளைக் குவித்தது. 10 பிரிவுகளின் கீழ் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ’கில்லர்ஸ் ஆஃப் பிளவர் மூன்’ திரைப்படம் எந்த விருதையும் பெறாதது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, ஆஸ்கர் விழாவில் விருதை அறிவிக்கும் முன் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல், சில ஆண்டுகளுக்கு முன் ஆஸ்கர் விழாவில் நிர்வாணமாக ஓடிவந்த நடிகரைக் குறிப்பிட்டு பேசி, அதேபோல் இப்போதும் யாராவது தோன்றினால் எப்படியிருக்கும்? எனக் கேள்வியெழுப்பினார்.

இவர் பேசி முடித்தபோது, சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதை வழங்க வந்த ஜான் சீனா விருதாளர் பெயர் உள்ள அட்டையை இடுப்பிற்குக் கீழ் மறைத்தபடி நிர்வாணமாக மேடையில் தோன்றினார்.இதைப் பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும் கூச்சலிட்டு சிரித்தனர். அந்தத் தோற்றத்திலேயே, "ஆடைகள் என்பது மிக முக்கியமானது” என சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருது புவர் திங்ஸ் படத்திற்குக் கிடைத்ததாக அறிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory