» சினிமா » செய்திகள்

பாயும் புலி பைக்குடன் போஸ் கொடுத்த ரஜினி!!

சனி 2, மார்ச் 2024 8:46:41 AM (IST)'பாயும் புலி' படத்தில் தான் பயன்படுத்திய பைக்கின் மீது அமர்ந்து நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் கடந்த 1983-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பாயும் புலி'. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் பயன்படுத்திய பைக் தற்போது ஏவிஎம் ஹெரிட்டேஜ் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பைக்கின் மீது அமர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். 

இந்த புகைப்படத்தை ஏவிஎம் படத்தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்தப் பதிவில், "காலத்தின் பொக்கிஷமான தருணம்... ஏவிஎம் மியூசியத்தில் நீங்கள் மீட்டெடுக்கக்கூடிய ஒன்று. 'பாயும் புலி'யில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பயன்படுத்திய புகழ்பெற்ற பைக்கைப் பார்க்க வாருங்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory