» சினிமா » செய்திகள்

இயக்குநர் பாலா என்னை அடித்தார்: நடிகை மமிதா பைஜூ புகார்!

வியாழன் 29, பிப்ரவரி 2024 3:53:07 PM (IST)இயக்குநர் பாலா தன்னை அடித்ததாக பிரேமலு படத்தின் நாயகி மமிதா பைஜூ கூறியுள்ளார்.

நஸ்லன், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிரேமலு. இப்படம் இதுவரை உலகளவில் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. சூப்பர் சரண்யாவில் அசத்திய மமிதா பைஜூ பிரேமலுவில் அட்டகாசம் செய்துள்ளார். இதனால், தென்னிந்திய சினிமாவில் கவனிக்கும் நடிகையாக உருவாகியுள்ளார் மமிதா.

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நேர்காணல் ஒன்றில் பேசிய மமிதா பைஜூ, "வணங்கான் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, இயக்குநர் பாலா ‘வில்லடிச்சா மாடன்’ என்கிற பாடலுக்காக வாத்தியம் ஒன்றை வாசித்தபடி ஆடச் சொன்னார். ஆனால், நான் அதற்கு தயாராக இருக்கவில்லை. அதனால், சில டேக்குகள் எடுத்தேன். இதனால், கோபப்பட்ட பாலா என் முதுகில் அடித்தார். அதன்பின், அப்படத்திலிருந்து நான் விலகிக்கொண்டேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதைக்கேட்டு, அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் பாலாவைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.பரதேசி படப்பிடிப்பில் பாலா நடிகர்களிடம் வன்முறையாக நடந்துகொண்ட விடியோவுடன் மமிதா பேசியதை இணைத்து விடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வணங்கான். இத்திரைப்படத்தில் முதலில் நடிகர் சூர்யா நடிக்க இருந்த நிலையில், கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் படத்தில் இருந்து விலகினார். இதனையடுத்து அருண்விஜய் நடித்து திரைப்படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் இயக்குநர் மிஷ்கின், சமுத்திரக்கனி நடித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory