» சினிமா » செய்திகள்
ககன்யான் திட்டத்தில் விண்வெளி செல்லும் வீரரை மணந்த நடிகை!!
வியாழன் 29, பிப்ரவரி 2024 11:11:25 AM (IST)
ககன்யான் திட்டம் மூலம் விண்வெளி செல்லும் குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணனை மணந்து கொண்டதாக நடிகை லெனா அறிவித்துள்ளார்.
ககன்யான் திட்டம் மூலம் விண்வெளி செல்லும், சென்னையைச் சேர்ந்த விமானப்படை குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், கேரளாவைச்சேர்ந்த விமானி பிரசாந்த் பாலகிருஷ்ணன், உ.பி.யை சேர்ந்த அங்கத் பிரதாப், சுபன்சு சுக்லாஆகியோரின் பெயரை, பிரதமர் மோடி நேற்று முன்தினம் வெளியிட்டார். இதில், பிரசாந்த் பாலகிருஷ்ணனை, மலையாள நடிகை லெனா ஜன.17-ல்திருமணம் செய்து கொண்டார்.
ஆனால்,இதை யாருக்கும் தெரிவிக்கவில்லை. பிரதமர் மோடி, பிரசாந்த் பாலகிருஷ்ணன் பெயரை அறிவித்த சில மணி நேரங்களில் லெனா, திருமண தகவலை தனது சமூக வலைதளப் பக்கம் மூலம் அறிவித்தார். அதில்,"எங்கள் திருமணம் பாரம்பரிய முறைப்படி நடந்தது. என் கணவரின் சாதனை, நாட்டுக்கும் கேரளாவுக்கும் வரலாற்று பெருமையை தேடித்தரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மலையாள நடிகையான லெனா, தமிழில் அனேகன், கடாரம் கொண்டான் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர், ஏற்கெனவே, அபிலாஷ் குமார் என்பவரை 2004-ல் திருமணம் செய்திருந்தார். 2013-ல் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.