» சினிமா » செய்திகள்

இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் காலமானார்

வியாழன் 8, பிப்ரவரி 2024 12:23:12 PM (IST)



ரஜினிகாந்த் நடித்த ‘நான் அடிமை இல்லை’ உட்பட பல படங்களுக்கு இசை அமைத்த விஜய் ஆனந்த் காலமானார். அவருக்கு வயது 71.

இயக்குநர் விசுவின் நாடகங்களுக்கு இசை அமைத்து வந்தவர் விஜய் ஆனந்த்.விசு இயக்கி 1984-ம் ஆண்டு வெளியான ‘நாணயம் இல்லாத நாணயம்’ படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனார். தொடர்ந்து, காவலன் அவன் கோவலன், ஊருக்கு உபதேசம், ராசாத்தி வரும் நாள், ரஜினிகாந்த் நடித்த, ‘நான் அடிமை இல்லை’ உட்பட பல படங்களுக்கு இசை அமைத்தார்.

‘நான் அடிமை இல்லை’ படத்தில் இடம் பெற்ற ’ஒரு ஜீவன் தான்...’ பாடல் மூலம் மிகவும் பிரபலமான இவர், தமிழில் சுமார் 25 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். கன்னடத்தில் 180 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜய் ஆனந்த் நேற்று முன் தினம் காலமானார். அவருடைய இறுதிச்சடங்கு பெருங்களத்தூரில் நேற்று நடந்தது. மறைந்த விஜய் ஆனந்துக்கு அமலி என்ற மனைவி ஜெனிபர் என்ற மகள் உள்ளனர். விஜய் ஆனந்த் மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பொங்கல் ரேசில் கமல், அஜித் படங்கள்!

வியாழன் 12, செப்டம்பர் 2024 3:32:13 PM (IST)

சுந்தர்.சி - வடிவேலு இணையும் ‘கேங்கர்ஸ்’

வியாழன் 12, செப்டம்பர் 2024 11:28:12 AM (IST)

மனைவியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவிப்பு!

திங்கள் 9, செப்டம்பர் 2024 3:44:57 PM (IST)


Sponsored Ads


CSC Computer Education




Thoothukudi Business Directory