» சினிமா » செய்திகள்
கமல்ஹாசன் நடிக்கும் தக் லைப் படப்பிடிப்பு தொடங்கியது!
புதன் 24, ஜனவரி 2024 5:30:53 PM (IST)
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைப் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.
![](https://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/thuglifekamal_1706097676.jpg)
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகை திரிஷா, நடிகர்கள் துல்கர் சல்மான், ஜெயம்ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
சமீபத்தில் இந்த படத்தில் நடிகர்கள் கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ் மற்றும் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி ஆகியோர் இணைந்துள்ளதாக பட நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில், 'தக் லைப்' (Thug Life) திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது என படக்குழு தெரிவித்துள்ளது. இன்று முதல் படப்பிடிப்பு இனிதே ஆரம்பம் என ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் கமல்ஹாசன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/gobi43i_1721992811.jpg)
செய்வினை வைத்துவிடுவதாக பெண் மிரட்டல்: பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் புகார்!
வெள்ளி 26, ஜூலை 2024 4:50:43 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/andhaganvijay_1721824039.jpg)
பிரசாந்தின் அந்தகன் பாடலை வெளியிட்ட விஜய்!
புதன் 24, ஜூலை 2024 5:56:54 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/ajithprashantneel_1721822969.jpg)
கே.ஜி.எப் இயக்குனருடன் இணையும் நடிகர் அஜித்?
புதன் 24, ஜூலை 2024 5:15:37 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/yogibabutcr_1721735497.jpg)
திருச்செந்தூர் கோவிலில் நடிகர் யோகிபாபு சுவாமி தரிசனம்!
செவ்வாய் 23, ஜூலை 2024 5:20:30 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/rajinipressi4i_1721647275.jpg)
இந்தியன் 2 படம் நன்றாக இருக்கிறது” - ரஜினிகாந்த் கருத்து
திங்கள் 22, ஜூலை 2024 4:50:32 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/sivakarthikeyansk_1721215732.jpg)
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்!
புதன் 17, ஜூலை 2024 4:59:12 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/rojatcr_1721193788.jpg)