» சினிமா » செய்திகள்

ரஜினி படத்தில் ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி!

செவ்வாய் 3, அக்டோபர் 2023 3:45:58 PM (IST)

ஞானவேல் இயக்க உள்ள ரஜினியின் 170வது படத்தில் ஃபஹத் ஃபாசில் மற்றும் ராணா டகுபதி நடிக்க உள்ளனர். 

ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினியுடன் பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முதல் படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரத்தை லைகா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இப்படத்தில் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு அறிவித்தது.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகர்கள் ஃபஹத் ஃபாசில் மற்றும் ராணா டகுபதி இருவரும் இணைய உள்ளதாக லைகா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று அறிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் இன்று திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றுள்ளார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இப்படம் நல்ல கருத்துள்ள பிரம்மாண்ட பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory