» சினிமா » செய்திகள்

பிரான்ஸ் அதிபர், பிரதமர் மோடியுடன் நடிகர் மாதவன்: வைரலாகும் புகைப்படங்கள்!

திங்கள் 17, ஜூலை 2023 12:13:47 PM (IST)



பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரதமர் நரேந்திர மோடிக்கு அளித்த இரவு விருந்தில் நடிகர் மாதவன் கலந்து கொண்டுள்ளார். இதனை அவர் தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14 ஆம் தேதி தேசிய தினம் பாஸ்டில் டே கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அந்நாட்டின் அதிபர் இமானுவல் மேக்ரான் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, அவர் 2 நாள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸுக்கு சென்றிருந்தார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இறங்கிய பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டின் பிரதமர் எலிசபெத் போர்ன் நேரில் வறவேற்றார். தொடர்ந்து மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், பாஸ்டில் தின அணி வகுப்பில் பிரதமர் நரேந்திர மோடி மற்ற முக்கிய பிரமுகர்களை சந்தித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருதை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வழங்கினார். மேலும், பிரதமர் மோடிக்கு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இரவு விருந்து வழங்கினார்.

இந்தநிலையில் இந்த இரவு விருந்தில் நடிகர் மாதவன் கலந்து கொண்டுள்ளார். இதனை தனது சமூக வலை தளத்தில் தெரிவித்துள்ள அவர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் மோடியுடன் இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். இவை தற்போது வைரலாகி வருகிறது. என் வாழ்க்கையில் எப்போதும் ஊக்கமளிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்ததற்கு மிக்க நன்றி ஸ்ரீ  என்று மாதவன் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory