» சினிமா » செய்திகள்

வெற்றிமாறன் சிறந்த இயக்குநர்: இளையராஜா புகழாரம்!

வியாழன் 9, மார்ச் 2023 3:13:29 PM (IST)

"1500 படங்களுக்கு மேல் இசையமைத்தவன் என்கிற முறையில் சொல்கிறேன்,  வெற்றிமாறன் சிறந்த இயக்குநர்" என இளையராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

'அசுரன்’ திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் வெற்றிமாறன் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து ‘விடுதலை’ என்கிற தலைப்பில் புதிய படத்தை இயக்கி வந்தார்.  இப்படத்தில் நடிகர் சூரி நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், பீட்டர் ஹெய்ன் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளனர்.   

இரண்டு பாகங்களாக வெளியாகும் விடுதலை திரைப்படத்தின்  முதல் பாகத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்நிலையில், டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இளையராஜா ‘வெற்றிமாறன் திரையுலகின்  முக்கியமான இயக்குநர். அவருடைய ஒவ்வொரு திரைக்கதையும் வேறுவேறானவை. அதில் எனக்கு பெரிய சந்தோஷம். 1500 படங்களுக்கு மேல் இசையமைத்தவன் என்கிற முறையில் சொல்கிறேன்,  வெற்றிமாறன் சிறந்த இயக்குநர்’ எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam

Black Forest Cakes
Thoothukudi Business Directory