» சினிமா » செய்திகள்

அஜித்தின் துணிவு பிப்ரவரி 8-ல் ஓடிடியில் ரிலீஸ்!

வெள்ளி 3, பிப்ரவரி 2023 4:17:25 PM (IST)அஜித் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான துணிவு திரைப்படம் வரும் பிப்ரவரி 8-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு சாமானியர்கள் மீது வங்கிகள் நிகழ்த்தும் அத்துமீறல்களை பேசுகிறது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். மஞ்சுவாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் கடந்த ஜனவரி 11-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் சிறப்புக் காட்சிகள் முதல்நாள் நள்ளிரவு 1 மணி அளவில் தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டன.

படம் வெளியான முதல் நாள் தமிழகம் முழுவதும் ரூ.24.59 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியானது. தற்போது படம் உலக அளவில் ரூ.300 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படம் வரும் பிப்ரவரி 8-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory