» சினிமா » செய்திகள்

விஜய் - லோகேஷ் கூட்டணி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

செவ்வாய் 31, ஜனவரி 2023 11:42:07 AM (IST)‘மாஸ்டர்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பின்னர் நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

‘வாரிசு’ படத்துக்குப் பின்னர் நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணையும் ‘தளபதி 67’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். ‘மாஸ்டர்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பின்னர் நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 2ம் தேதி தொடங்கவுள்ளது. ‘கத்தி’, ‘மாஸ்டர்’, ‘பீஸ்ட்’ படங்களுக்குப் பின்னர் 4வது முறையாக அனிருத் விஜயுடன் இப்படத்தில் இணைகிறார். படத்தின் ஒளிப்பதிவை மனோஜ் பரமஹம்சாவும், சண்டைக்காட்சிகளை அன்பறிவும், எடிட்டிங்கை பிலோமின் ராஜும், கலையை என்.சதீஷ் குமாரும் செய்கின்றனர். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் எஸ்.எஸ்.லலித்குமார் தயாரிக்கிறார், இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam


Black Forest CakesThoothukudi Business Directory