» சினிமா » செய்திகள்

கவுண்டமணி நடிக்கும் பழனிச்சாமி வாத்தியார்: பூஜையுடன் தொடங்கியது!

வெள்ளி 20, ஜனவரி 2023 4:09:28 PM (IST)நடிகர் கவுண்டமணி மீண்டும் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேல் நடித்து வருபவர் நடிகர் கவுண்டமணி. இன்றளவும் கவுண்டமணியின் நகைச்சுவை காட்சிகள் ரசிக்க வைப்பவை. உடல்நிலை காரணமாக சினிமாவை விட்டு விலகியிருந்தவர் கடந்த 2015 ஆம் ஆண்டு 49-ஓ திரைப்படத்தில் நாயகனாக நடித்தார். அதனைத் தொடர்ந்து ’எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படத்தில் ஹீரோவாக நடித்தார்.

தற்போது மீண்டும் ‘பழனிச்சாமி வாத்தியார்’ என்கிற திரைப்படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்கேற்றனர். இப்படத்தில் கஞ்சா கருப்பு, யோகி பாபு முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மதுரை செல்வம் தயாரிக்கும் இப்படத்தை அன்பரசன் இயக்குகிறார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory