» சினிமா » செய்திகள்

நாட்டுக் கூத்து பாடலுக்கு கோல்டன் குளோப் விருது

புதன் 11, ஜனவரி 2023 11:45:57 AM (IST)




ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டுக் கூத்து பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.

இயக்குநா் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘ஆா்ஆா்ஆா்’ திரைப்படம் கடந்த மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் வெளியானது. நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம், மிகப் பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுக்கு ஆர்ஆர்ஆர் படமும் போட்டியிட்டிருந்தது. இந்த கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு கூத்து பாடல் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இந்த பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய பாடல் நாட்டு கூத்து.

இந்நிலையில், இந்தாண்டுக்கான சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை நாட்டு கூத்து பாடல் வென்றது. இந்த நிகழ்வில் ஆர்ஆர்ஆர் படத்தின் இயக்குநர் ராஜமெளலி, ராம்சரண், ஜூனியா் என்டிஆா், இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு விருதை பெற்றனர். மேலும், 95-ஆவது ஆஸ்கா் விழாவுக்கும் ஒரிஜினல் பாடல் பிரிவின் இறுதிப் பட்டியலுக்கு நாட்டு கூத்து பாடல் தேர்வாகியுள்ளது. இந்த விழா மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Nalam Pasumaiyagam

Black Forest Cakes



Thoothukudi Business Directory