» சினிமா » செய்திகள்
பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா காலமானார்
வெள்ளி 2, செப்டம்பர் 2022 11:16:41 AM (IST)

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், 'ராவணன்' பொன்னியின் செல்வன் உட்பட பல படங்களில் பாடியுள்ள பம்பா பாக்யா இன்று காலமானார்.
பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 49. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், 'ராவணன்' படத்தில் இடம்பெற்ற கெடாகறி என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமானவர் பம்பா பாக்யா. அதன்பின்னர் எந்திரன் 2.0 படத்தில் 'புள்ளினங்காள்', சர்கார் படத்தில் 'சிம்ட்டாங்காரன்', பிகில் படத்தில் 'காலமே', என பல ஹிட் பாடல்களைப் பம்பா பாக்யா பாடியுள்ளார்.
சந்தோஷ் தயாநிதி இசையமைத்த ராட்டி என்ற ஆல்பத்தில் "எதுக்கு உன்ன பார்த்தேன்னு நினைக்க வைக்கிறியே…" என்ற பாடல் மிக பிரபலம் ஆனது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் 'பொன்னி நதி' பாடலை பம்பா பாக்யா பாடியுள்ளார். இவரது திடீர் மறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரின் மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

த்ரிஷாவிடம் மன்னிப்பு கோரினார் மன்சூர் அலிகான்!
வெள்ளி 24, நவம்பர் 2023 12:26:43 PM (IST)

கங்குவா படப்பிடிப்பில் விபத்து: நடிகர் சூர்யா காயம்?
வியாழன் 23, நவம்பர் 2023 4:35:22 PM (IST)

21 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே படப்பிடிப்பு தளத்தில் ரஜினி, கமல்: வைரல் புகைப்படங்கள்
வியாழன் 23, நவம்பர் 2023 4:06:52 PM (IST)

டி.டி.எப். வாசனின் யூடியூப் சேனலை முடக்க நோட்டீஸ்!
திங்கள் 20, நவம்பர் 2023 4:44:03 PM (IST)

நடிகை த்ரிஷா குறித்து அவதூறு: மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு!
திங்கள் 20, நவம்பர் 2023 3:35:56 PM (IST)

மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை : குஷ்பு உறுதி
திங்கள் 20, நவம்பர் 2023 11:40:03 AM (IST)
