» சினிமா » செய்திகள்
விமான நிலையத்தில் 7 மணி நேரம் காத்திருந்த இளையராஜா
திங்கள் 29, ஆகஸ்ட் 2022 11:26:14 AM (IST)
மோசமான வானிலை காரணமாக விமானம் தாமதமானதால் இசையமைப்பாளர் இளையராஜா சென்னை விமான நிலையத்தில் 7 மணி நேரம் காத்திருந்தாா்.
சென்னையில் பெய்த கனமழை காரணமாக சென்னை விமானநிலையத்துக்கு வரவேண்டிய விமானங்கள் சனிக்கிழமை இரவு பெங்களூா் உள்ளிட்ட சில முக்கிய நகரங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன. இந்தநிலையில் இசையமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இளையராஜா, ஹங்கேரிக்குச் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவர் பயணிக்கவிருந்த ஐக்கிய அமீரகத்தின் எமிரேட்ஸ் விமானம் இரவு 9 மணிக்குப் புறப்படுவதாக இருந்தது.
ஆனால் மழையினால் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் இரவு 9 மணிக்குப் பதிலாக தாமதமாக நேற்று அதிகாலை 2.45 மணிக்குச் சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றது. இரவு 9 மணி விமானத்துக்கு 7 மணிக்கே வந்து காத்திருந்த இளையராஜா, மழையின் காரணமாக விமானம் மேலும் தாமதமானதைத்தொடா்ந்து சென்னை விமான நிலையத்தில் சுமாா் 7 மணி நேரம் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஹங்கேரிக்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக செல்ல வேண்டிய அவா், எம்.பி, என்பதால் விஐபி பகுதியில் காத்திருந்தாா். இந்த விமானத்தில் முதலில் துபை சென்று அங்கிருந்து மற்றொரு விமானத்தில் ஹங்கேரிக்கு செல்ல திட்டமிட்டிருந்தாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67வது படத்திற்கு பெயர் அறிவிப்பு...!
வெள்ளி 3, பிப்ரவரி 2023 5:27:33 PM (IST)

கே. விஸ்வநாத் மறைவு திரை உலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு : முதல்வர் ஸ்டாலின்!
வெள்ளி 3, பிப்ரவரி 2023 4:41:15 PM (IST)

அஜித்தின் துணிவு பிப்ரவரி 8-ல் ஓடிடியில் ரிலீஸ்!
வெள்ளி 3, பிப்ரவரி 2023 4:17:25 PM (IST)

ஒழுங்கா போய் வேலைய பாரு..' ரசிகருக்கு அறிவுரை கூறிய நடிகர் ரஜினிகாந்த்..!
புதன் 1, பிப்ரவரி 2023 5:32:12 PM (IST)

விஜய் - லோகேஷ் கூட்டணி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
செவ்வாய் 31, ஜனவரி 2023 11:42:07 AM (IST)

பழம்பெரும் சன்டை பயிற்சி இயக்குநர் ஜூடோ ரத்னம் மறைவு : ரஜினிகாந்த் இரங்கல்
வெள்ளி 27, ஜனவரி 2023 10:56:22 AM (IST)
