» சினிமா » செய்திகள்

ஆர்யாவுக்காக காமெடியனாக நடிக்கத் தயார் : சந்தானம்

வெள்ளி 26, ஆகஸ்ட் 2022 5:41:33 PM (IST)ஆர்யாவுக்காக மீண்டும் நகைச்சுவை நடிகராக நடிக்கத் தயார் என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். 

கடந்த சில மாதங்களுக்கு முன் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் உருவாகவுள்ளதாக தகவல் பரவியது. இந்தத் தகவல் ரசிகர்களிடைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கூடவே தற்போது ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கும் சந்தானம் மீண்டும் நகைச்சுவை நடிகராக நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. 

இந்த நிலையில் நடிகர் ஆர்யாவின் கேப்டன் பட விழாவில் பேசிய சந்தானம், ஆர்யா எனக்கு ஒரு நல்ல நண்பர். என்னிடம் இரண்டு நாயகர்கள் படங்களில் நடிக்கவும், சிறப்பு வேடத்தில் நடிக்கவும் என்னிடம் நிறைய பேர் கேட்டார்கள். ஆனால் நான் நடிக்கவில்லை. 

இப்பொழுது சொல்கிறேன். ஆர்யா, 'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' படம் எடுத்தால் அதில் நான் நடிப்பேன். நான் நகைச்சுவை நடிகனாக நடித்துக்கொண்டிருக்கும்போது ஆர்யா என்னை உடற்பயிற்சி செய்ய வற்புறுத்துவார். அவர் பணம் போட்டு இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். எல்லோரும் கண்டிப்பாக கேப்டன் படத்தைப்  பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory