» சினிமா » செய்திகள்

ரஜினியின் ஜெயிலரில் நடிக்கும் நட்சத்திரங்கள் பட்டியல்!

புதன் 24, ஆகஸ்ட் 2022 4:46:33 PM (IST)

ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் பட்டியலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் நடிப்பில் உருவாகிவரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இதனை முன்னிட்டு ஜெயிலர் பட முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.  இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல் அடிக்கடி வெளியான நிலையில் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

அதில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் இந்தப் படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். படையப்பா படத்துக்கு பிறகு ரம்யா கிருஷ்ணன் இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் இணைந்த நடிக்க உள்ளார். இது ரஜினி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory