» சினிமா » செய்திகள்

மகனுக்காக இணைந்த தனுஷ், ஐஸ்வர்யா!

செவ்வாய் 23, ஆகஸ்ட் 2022 12:11:53 PM (IST)நடிகர் தனுஷ், மற்றும் ஐஸ்வர்யா தங்களது மகனுக்காக கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்று சேர்ந்துள்ளனர். 

நடிகர் தனுஷும் ஐஸ்வர்யா ரஜினியும் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். 18 வருடமாக ஒன்றாக வாழ்ந்த அவர்களைச் சேர்த்து வைக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இருவரும் தங்களது வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். தனுஷ் நடிப்பில் கவனம் செலுத்த, பாலிவுட் படம் இயக்க இருக்கிறார், ஐஸ்வர்யா. 

இந்நிலையில் இருவரும் தங்கள் மகனுக்காக கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்று சேர்ந்துள்ளனர். இவர்களின் மூத்த மகன் யாத்ரா, பள்ளியில் விளையாட்டு அணி கேப்டனாக நேற்று பொறுப்பேற்றார். இந்த விழாவில் தனுஷும், ஐஸ்வர்யாவும் கலந்துகொண்டனர். பாடகர் விஜய் யேசுதாசும் கலந்துகொண்டார். மகனுடன் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Nalam Pasumaiyagam
Black Forest CakesThoothukudi Business Directory