» சினிமா » செய்திகள்

ரசிகர்கள் ரசனை மாறிவிட்டது: பாலிவுட் படங்கள் தோல்வி குறித்து மாதவன் விளக்கம்

வியாழன் 18, ஆகஸ்ட் 2022 4:20:31 PM (IST)

பாலிவுட் திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவது குறித்து நடிகர் மாதவன் விளக்கம் அளித்துள்ளார்.

சமீப காலமாக பாலிவுட் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி பெரிய தோல்வியைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, அமீர்கான் நடிப்பில் ரூ.180 கோடி செலவில் உருவாக்கப்பட்ட ‘லால் சிங் சத்தா’  இந்தியா முழுவதும் 5 மொழிகளில் வெளியாகியும் ரூ.50 கோடி வசூலை எட்ட முடியாமல் திணறி வருகிறது. அதேபோல் ரன்வீர் சிங்கின் ‘சம்ஷோரா’, அக்‌ஷய் குமாரின் ‘ரக்‌ஷா பந்தன்’ உள்ளிட்ட படங்களும் படுதோல்விப்படமாக அமைந்தன. 

இந்நிலையில் , நடிகர் மாதவன் நடிப்பில் வெளியாக உள்ள ‘தோகா: ரவுண்ட் டி கார்னர்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மாதவனிடம் ‘பாலிவுட் படங்களின் தொடர் தோல்விக்கு என்ன காரணம்’? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மாதவன், "சினிமாவில் அனைத்து நடிகர்களும் முழுமையான உழைப்பைச் செலுத்துகின்றனர். 

கரோனாவிற்குப் பின்பு உலகளவிலான படங்களையும் ரசிகர்கள் பார்க்கத் துவங்கிவிட்டதால் அவர்களின் ரசனையும் மாறிவிட்டது. தென்னிந்தியப் படங்கள் பாலிவுட்டில் பெரிதாக வெற்றி பெறுவதில்லை. இந்த நிலைமை நிரந்தரம் அல்ல. நல்ல திரைப்படங்களை எடுத்தால் மக்கள் கண்டிப்பாக திரையரங்கம் வருவார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes


Thoothukudi Business Directory