» சினிமா » செய்திகள்

பொங்கலில் விஜய் - அஜித் படங்கள் மோதல் : வலிமை ரிலீஸ் தேதி அறிவிப்பு

புதன் 22, செப்டம்பர் 2021 12:48:51 PM (IST)

அஜித் நடித்துள்ள வலிமை படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். 

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்க, நீரவ் ஷா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. முதலில் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. 

இந்நிலையில் இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படமும் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரும் என கூறப்படுகிறது. 

கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த ஜில்லா திரைப்படமும், நடிகர் அஜித் நடித்த வீரம் திரைப்படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 7 வருடங்களுக்குப் பிறகு நடிகர் விஜய் மற்றும் அஜித் படங்கள் இணைந்து வெளியாகவுள்ளதால் ரசிகர்களுக்கு அது மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. வலிமை படத்தின் கிளிம்ப்ஸ் எனப்படும் முன்னோட்ட விடியோ நாளை வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory