» சினிமா » செய்திகள்
சந்தானம் பிறந்த நாளிளில் சபாபதி போஸ்டர் வெளியீடு
வியாழன் 21, ஜனவரி 2021 12:05:48 PM (IST)

சந்தானம் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் சபாபதி படத்தின் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் ஆர். சீனிவாச ராவின் படத்தில் சந்தானம் நடிக்கிறார். இப்படத்துக்கு சபாபதி எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆர்கே எண்டர்டயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் - கும்பகோணம், திருச்சி, சென்னையில் படமாக்கப்படவுள்ளது. சாம் சிஎஸ் இசையமைக்கிறார். மகன் - தந்தை உறவைச் சொல்லும் இப்படத்தில் தந்தை வேடத்தில் எம்.எஸ். பாஸ்கர் நடிக்கிறார்.
சந்தானம் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இதையடுத்து சபாபதி படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தானம் நடித்த ஏ1 படத்தை இயக்கிய ஜான்சன்.கே அடுத்ததாக சந்தானத்துடன் மீண்டும் இணைந்துள்ளார். பாரிஸ் ஜெயராஜ் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. சமீபத்தில் தில்லுக்கு துட்டு 2, ஏ1, டகால்டி, பிஸ்கோத் என சந்தானம் நடித்த படங்கள் வெளியாகின. டிக்கிலோனா என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு சரத்குமார் வாழ்த்து!!
சனி 20, பிப்ரவரி 2021 3:45:37 PM (IST)

சக்ரா படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்
வியாழன் 18, பிப்ரவரி 2021 5:17:12 PM (IST)

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நடிகர் அஜித்குமார் திடீர் வருகை!!
வியாழன் 18, பிப்ரவரி 2021 3:35:30 PM (IST)

ரசிகர்கள் கண்ணியம் காக்க வேண்டும்: வலிமை அப்டேட் விவகாரத்தில் அஜித் வருத்தம்!!
வியாழன் 18, பிப்ரவரி 2021 11:45:44 AM (IST)

இளையராஜாவின் இசைக் கோவில்: ரஜினிகாந்த் புகழாரம்!!
புதன் 17, பிப்ரவரி 2021 5:34:18 PM (IST)

விஷாலின் சக்ரா சக்ரா படத்தை வெளியிட இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 16, பிப்ரவரி 2021 5:22:54 PM (IST)
