» சினிமா » செய்திகள்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து மழை
புதன் 6, ஜனவரி 2021 8:09:23 AM (IST)
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்த நாளை இன்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.

ரோஜா படம் வந்தபோது, அதற்கு முன்பு வரை யாரும் கேட்டிராத வகையில், டிஜிட்டல் ஒலியை அறிமுகம் செய்து, ஒலியின் தரத்தில் ஒரு புதிய உச்சத்தை எட்டியிருந்தார் ரஹ்மான். அன்று முதல் இன்று வரை நிறைய புது புது ஒலிகளை தனது இசையில் கோர்ப்பது மட்டுமின்றி, பாடல்களை உருவாக்குவதிலும் தொடர்ச்சியாக புதுமையை கையாண்டு வருகிறார் ரஹ்மான்.
ரிதம் படத்தின் நதியே நதியே பாடல் முழுக்க தண்ணீரின் ஒலி கேட்டுக் கொண்டே இருக்கும். வண்டுகளின் ரீங்காரம், மழை என பலவிதமான ஒலிகளை பயன்படுத்தியுள்ளார். பாடல்களுக்கு மட்டுமல்லாமல் பின்னணி இசையிலும் இதை செய்துள்ளார். ரஜினி நடிப்பில் வெளியான சிவாஜி படத்தில், மொட்ட பாஸ் என தலையை தட்டும் போது வரும் ஒலியை பில்லியட்ஸ் விளையாட்டில் பயன்படுத்தும் பந்துகளை மேஜையில் கொட்டி ஒல்லிப்பதிவு செய்திருந்தார். கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என விருப்பப்பட்ட ரஹ்மான், அந்த ஆசையை இசைத்துறையில் நிறைவேற்றிக்கொண்டார்.
அவர் பயன்படுத்திய மென்பொருட்கள், புது புது எலக்ட்ரானிக் கருவிகளை தான் அவருக்கு பின் வந்த இளம் இசையமைப்பாளர்கள் பயன்படுத்துகின்றனர். ரஹ்மான் அறிமுகம் செய்த உன்னிக்கிருஷ்ணன் தனது முதல் படத்திலேயே சிறந்த பாடகருக்கான தேசிய விருதை பெற்றார். இந்த பிரிவில் ஒரு தமிழ் பாடல் தேசிய விருது பெற்றதும் இதுவே முதன் முறை. ஹரினி, சின்மயி, நரேஷ் ஐயர் என பல பாடகர்களை அறிமுகம் செய்துள்ளார். தற்போது இளைஞர்களின் ஃபேவரிட்டாக உள்ள சித் ஸ்ரீராமை அறிமுகம் செய்ததும் ரஹ்மான் தான். இப்படி பல புதுமைகளை செய்து , இன்றும் அனைவரது மனங்களையும் கொள்ளையடித்து கொண்டிருக்கிறார் இசைப்புயல்.....
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு சரத்குமார் வாழ்த்து!!
சனி 20, பிப்ரவரி 2021 3:45:37 PM (IST)

சக்ரா படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்
வியாழன் 18, பிப்ரவரி 2021 5:17:12 PM (IST)

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நடிகர் அஜித்குமார் திடீர் வருகை!!
வியாழன் 18, பிப்ரவரி 2021 3:35:30 PM (IST)

ரசிகர்கள் கண்ணியம் காக்க வேண்டும்: வலிமை அப்டேட் விவகாரத்தில் அஜித் வருத்தம்!!
வியாழன் 18, பிப்ரவரி 2021 11:45:44 AM (IST)

இளையராஜாவின் இசைக் கோவில்: ரஜினிகாந்த் புகழாரம்!!
புதன் 17, பிப்ரவரி 2021 5:34:18 PM (IST)

விஷாலின் சக்ரா சக்ரா படத்தை வெளியிட இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 16, பிப்ரவரி 2021 5:22:54 PM (IST)
