» சினிமா » செய்திகள்

தியேட்டர்களில் தான் மாஸ்டர் வெளிவரும்: லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம்

புதன் 23, செப்டம்பர் 2020 5:38:40 PM (IST)

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகாது என அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறி உள்ளார்.

கோவை மாவட்ட தலைமை விஜய் நற்பணி இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரத்தில் நடந்தது. இதில் மாஸ்டர் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

அதன்பின் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாக வாய்ப்பு இல்லை. மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் தான் வெளிவரும். தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதி அளித்த பின்னர் திரைப்படம் வெளியாகும் தேதியை தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யும். கரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளதால், அதனை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. தியேட்டர்களை விரைவில் திறக்கவில்லை என்றால் பலரும் கஷ்டப்படுவார்கள். எனவே விரைவில் தியேட்டர்கள் திறக்கப்படும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Thoothukudi Business Directory