» சினிமா » செய்திகள்

இந்தியன் 2 ஷூட்டிங் விபத்து :ரூ. 4 கோடி இழப்பீடு வழங்கல்

வெள்ளி 7, ஆகஸ்ட் 2020 12:50:39 PM (IST)இந்தியன் 2 விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 4 கோடி இழப்பீடு தொகையை நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மற்றும் படக்குழுவினர் வழங்கினர்.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல் அகா்வால் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரத்தில் நடைபெற்று வந்தது. கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி இப்படப்பிடிப்பில் கிரேன் விழுந்து உதவி இயக்குநா் சென்னை அபிராமபுரத்தைச் சோ்ந்த சி.ஸ்ரீகிருஷ்ணா, திரைப்பட தொழில்நுட்ப பணியாளா்கள் சொ.சந்திரன், சி.மது ஆகியோா் உயிரிழந்தனா். மேலும் 13 போ் காயமடைந்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக நசரத்பேட்டை போலீஸாா், லைகா நிறுவனம், தயாரிப்பு மேலாளா், கிரேன் உரிமையாளா் கிரேன் ஆபரேட்டா் ராஜன் ஆகியோா் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டா் ராஜனை போலீஸாா் உடனடியாக கைது செய்தனா். கமல், ஷங்கரிடம் விசாரணை நடைபெற்றது. இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியாக ரூ. 1 கோடி அளிப்பதாக கமல் ஹாசன் அறிவித்தார். ஷங்கர் ரூ. 1 கோடி மற்றும் லைகா நிறுவனம் ரூ. 2 கோடி வழங்குவதாக அறிவித்தார்கள். 

இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு ரூ. 4 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கமல், ஷங்கர், பெப்சி தலைவர் செல்வமணி ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களிடம் நேற்று வழங்கினார்கள். விபத்தில் மரணமடைந்த மூன்று பேருக்கும் தலா ரூ. 1 கோடியும் காயமடைந்த லைட்மேனுக்கு ரூ. 90 லட்சமும் சிறிய காயங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 10 லட்சமும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory