» சினிமா » செய்திகள்

ரஜினியுடன் பேசியது சமூகவலைத்தளங்களில் கசிந்தது - இயக்குநர் தேசிங் பெரியசாமி வருத்தம்!!

வெள்ளி 31, ஜூலை 2020 12:42:14 PM (IST)

ரஜினியுடன் தான் பேசிய உரையாடல் சமூகவலைத்தளங்களில் கசிந்தது குறித்து இயக்குநர் தேசிங் பெரியசாமி வருத்தம் தெரிவித்துள்ளார். 

துல்கர் சல்மான், ரிது வர்மா நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் கடந்த பிப்ரவரி 28 அன்று வெளியானது. இந்நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை ரஜினி பாராட்டியுள்ளார். தன்னிடம் போனில் ரஜினி பாராட்டியது குறித்து ட்வீட் வெளியிட்டுள்ளார் தேசிங் பெரியசாமி. அதில் அவர் கூறியதாவது: பிரமாதம் அருமை... படம் பார்த்து அசந்துவிட்டேன். வாழ்த்துகள். உங்களுக்குப் பெரிய வருங்காலம் உள்ளது. - காலையில் இருந்து இது மட்டும் தான் காதுல கேட்டுட்டே இருக்கு. பறந்துகிட்டு இருக்கேன். கடவுளுக்கு நன்றி. இந்த நாளுக்காகக் காத்திருந்த அனைவருக்கும் நன்றி என்று எழுதியிருந்தார்.

மேலும் சமூகவலைத்தளங்களில் தேசிங்கு பெரியசாமியுடன் ரஜினி பேசியதன் ஆடியோ வெளியாகியுள்ளது. இத்தனை நாள் படம் பார்க்காமல் இருந்ததற்கு மன்னிக்கவும். மிகவும் தாமதமாகச் சொல்கிறேன். வாழ்த்துகள். எனக்கும் ஒரு கதை தயார் செய்யுங்கள். நிஜமாகவே சொல்கிறேன். யோசித்து வையுங்கள் என்று தேசிங்கு பெரியசாமியிடம் ரஜினி பேசியுள்ளார். இதுபற்றி தேசிங் பெரியசாமி ட்வீட் செய்ததாவது: எங்களுடைய உரையாடல் கசிந்ததில் நான் வேதனையடைந்துள்ளேன். இது என்னுடைய தனிப்பட்ட தொலைபேசி அழைப்பு. என்னுடைய ட்வீட்டிலும் தலைவரின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடந்துவிட்டது. எல்லாமே நன்மைக்கே என்று கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Thoothukudi Business Directory