» சினிமா » செய்திகள்

வனிதாவிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைதான சூர்யா தேவி ஜாமீனில் விடுதலை

வியாழன் 23, ஜூலை 2020 3:52:19 PM (IST)

நடிகை வனிதாவிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சூர்யா தேவி என்பவரை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். 


நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகின்றன. பீட்டர் பால் முதல் மனைவியிடம் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். அந்தவகையில் சூர்யா தேவி என்ற பெண் தொடர்ந்து வனிதாவின் திருமணத்தைப் பற்றியும், வனிதாவை பற்றியும் பல்வேறு கருத்துக்களை வீடியோவாக வெளியிட்டு வந்தார்.

வனிதாவும் அதற்கு பதிலளிக்கும் வண்ணம் பல்வேறு கருத்துக்களை வீடியோக்களாக வெளியிட்டிருந்தார். இதனையடுத்து நடிகை வனிதா, சூர்யா தேவி மீது போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார். இதேபோல் வனிதா மீது, சூர்யா தேவியும் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பான புகார்கள் அனைத்தையும் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து நடிகை வனிதாவையும், சூர்யா தேவியையும் போலீசார் அழைத்து விசாரித்தனர். இதுபோன்று அவதூறு செய்து வீடியோக்கள் வெளியிடக்கூடாது என இருவரையும் போலீசார் எச்சரித்தனர். போலீசாரின் எச்சரிக்கையை மீறி சூர்யா தேவி தொடர்ந்து நடிகை வனிதா குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் மிரட்டும் வகையிலும் வீடியோக்கள் வெளியிட்டதால், அவரை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பெண்ணை ஆபாசமாக திட்டுதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். 

இந்நிலையில் கைதான சூர்யா தேவி ஜாமீனில் இன்று விடுவிக்கப்பட்டார். நடிகை கஸ்தூரியின் முயற்சியின் மூலம் ஜாமீனில் அவர் வெளியே வந்துள்ளது தெரிய வந்துள்ளது. தனது வழக்கறிஞர் மூலமாக சூர்யா தேவி ஜாமீனில் வெளிவந்ததாகவும் அவருடைய குழந்தைகள் பாதுகாப்பாக உள்ளதாகவும் ட்விட்டரில் கஸ்தூரி கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Thoothukudi Business Directory