» சினிமா » செய்திகள்

சாத்தான்குளம் சம்பவம்: சுசித்ராவின் வீடியோவுக்கு ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்கள்!!

சனி 27, ஜூன் 2020 3:31:43 PM (IST)

சாத்தான்குளம் சம்பவத்தை ஜார்ஜ் ஃபிளாய்ட் சம்பவத்தோடு ஒப்பிட்டு பேசிய சுசித்ராவின் வீடியோ ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

தமிழ் திரையில் மாறுபட்ட குரலால் பல பாடல்கள் மூலம் பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்களை பெற்றவர் பாடகி சுசித்ரா. பிரபல வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். அண்மை காலமாக அவர் யோகா, சமையல் கலையில் ஆர்வம் காண்பித்து வந்த பாடகி சுசித்ரா, தற்போது தமிழக மக்களை அதிகம் பேச வைத்துள்ள சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இறந்து போன ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் ஆகியோரை பற்றி பேசி உள்ளார்.
சாத்தான்குளம் சம்பவத்தை அமெரிக்காவில் போலீசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்ட் சம்பவத்தோடு ஒப்பிட்டு பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டை தாண்டி இந்த செய்தியை கொண்டு செல்ல ஆங்கிலத்தில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.


மக்கள் கருத்து

G.RAMESHJun 27, 2020 - 04:25:46 PM | Posted IP 162.1*****

criminal wont escape from justice .But we need justice is equal to death penalty. This justice is example for all bad police in our country. Government should block that criminal PF account and all asset and give to family members. Dont give our tax money. Here people, murder by Police not by public. Is public did any wrong here. We are waiting for judgement.Here so many people have no food to eat,no job,cant able to live. Justice is equal for all. Here police is not our King.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory