» சினிமா » செய்திகள்

பிரபல நடிகர் இர்பான் கான் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

புதன் 29, ஏப்ரல் 2020 4:18:40 PM (IST)

பிரபல இந்தி நடிகர் இர்பான் கான், உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவு பாலிவுட் பிரபலங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் 1988-ம் ஆண்டு வெளியான சலாம் பாம்பே என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் வில்லன், குணச்சித்திர வேடம் என அனைத்திலும் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இவர் பாலிவுட் மட்டுமல்லாது ‘லைஃப் ஆஃப் பை’, ஜுராசிக் வேர்ல்டு போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். விளம்பர படங்களிலும் மாடலிங் செய்து வந்தார். இவர் நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் எனப்படும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக நேற்றிரவு அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 54. அவரது மறைவு பாலிவுட் பிரபலங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சனிக்கிழமை இவரின் தாயார் சாயிதா பேகம், 95, ஜெய்ப்பூரில் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் போடப்பட்டுள்ளதால், ஜெய்பூருக்கு செல்ல முடியாத நிலையில், வீடியோ காலில் அழுத படி தாயின் இறுதி சடங்குகளை இர்பான் கான் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 பிரதமர் மோடி இரங்கல்

இர்பான் கான் மறைவுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், இர்ஃபானின் மறைவு என்பது சினிமா, நாடக உலகிற்கு ஏற்பட்ட இழப்பாகும்.அவரது தனித்துவமான நடிப்பால் நினைவு கூறப்படுவார். என் நினைவுகள் அவரது குடும்பத்தை சுற்றி உள்ளது. அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory