» சினிமா » செய்திகள்

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் ஹீரோ டாக்டர் சேதுராமன் காலமானார்

வெள்ளி 27, மார்ச் 2020 10:27:08 AM (IST)

லட்டு தின்ன ஆசையா படத்தில் ஹீரோவாக  நடித்த டாக்டர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 36.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் சேதுராமன். அந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் தொடர்ச்சியாக வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா மற்றும் 50/50 உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பராவார். நேற்று (மார்ச் 26) இரவு சென்னையில் வீட்டில் இருக்கும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அருகிலிருந்த மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். 

அங்குச் சிகிச்சை பலனின்றி இரவு 8:30 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தது. இவருக்கு வயது 37. 2016-ம் ஆண்டு தான் இவருக்கும் உமையாளுக்கும் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் ஒரு மகள் இருக்கிறார். சேதுராமன் நடிகராக மட்டுமன்றி, தோல் மருத்துவ நிபுணராகவும் அறியப்பட்டவர். இவரிடம் பல்வேறு திரையுலக பிரபலங்கள் தோல் சிகிச்சை எடுத்து வந்தார்கள்.  எம்.பி.பி.எஸ், எம்.டி படித்த இவர் மும்பை மற்றும் சிங்கப்பூரில் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சியும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இளம் வயதிலேயே மாரடைப்பு வந்து காலமாகி இருப்பது, திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் இவருடைய இழப்பை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என்று தங்களுடைய ட்விட்டர் பதிவில் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education
Thoothukudi Business Directory