» சினிமா » செய்திகள்

வடிவேலு ரொம்பவும் கியூட்டாக இருக்கிறார்: மீம்சை ரசித்த ராஷ்மிகா!!

புதன் 26, பிப்ரவரி 2020 12:37:12 PM (IST)தன்னை வடிவேலுவுடன் ஒப்பிட்டு வெளியான மீம்ஸ்களை நடிகை ராஷ்மிகா ரசித்து பாராட்டியுள்ளார். 

தமிழ், தெலுங்கில் வெளியான டியர் காம்ரேட் படத்தில் கதாநாயகியாக வந்தவர் ராஷ்மிகா மந்தனா. ஏற்கனவே தெலுங்கில் கீதா கோவிந்தம், தேவதாஸ் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்துள்ளார். கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா பெங்களூருவில் சொந்தமாக தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். சமீபத்தில் ராஷ்மிகாவின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி தஸ்தாவேஜுகளை கைப்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது. தெலுங்கில் நிதினுடன் ராஷ்மிகா நடித்த பீஷ்மா படம் தற்போது திரைக்கு வந்து வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தை விளம்பரப்படுத்த ராஷ்மிகா விதவிதமான உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்தினார். ஒவ்வொரு புகைப்படத்துக்கும் முகத்தை வெவ்வேறு கோணங்களில் வைத்து போஸ் கொடுத்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானதும், அதே தோற்றத்தில் உள்ள நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் புகைப்படங்களை ராஷ்மிகா படத்துடன் இணைத்து சிலர் மீம்ஸ்களை உருவாக்கி வெளியிட்டனர். ராஷ்மிகாவின் அனைத்து புகைப்படங்களும் வடிவேலு கதாபாத்திரங்களின் சாயலில் இருந்ததால் இந்த மீம்ஸ்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. மீம்ஸ்களை ராஷ்மிகாவும் பார்த்து ரசித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில், "என்னால் இதனை ஒப்புக்கொள்ள முடியாது. வடிவேலு ரொம்பவும் கியூட்டாக இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகை பரவை முனியம்மா காலமானார்

திங்கள் 30, மார்ச் 2020 8:37:05 AM (IST)


Sponsored Ads

CSC Computer Education


Black Forest CakesThoothukudi Business Directory