» சினிமா » செய்திகள்

21 வருடங்களுக்குப் பிறகு கமல் படத்தில் வடிவேலு!

புதன் 25, செப்டம்பர் 2019 4:56:41 PM (IST)

காதலா காதலா படத்திற்கு பின் 21 வருடங்களுக்குப் பிறகு கமல் படத்தில் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

லைகா தயாரிப்பில் கமல் நடித்து இயக்கும் தலைவன் இருக்கின்றான் என்கிற படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்துக்கு இசை - ஏ.ஆர். ரஹ்மான். இந்தப் படத்தில் வடிவேலு நடிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் 21 வருடங்களுக்குப் பிறகு கமல் படத்தில் மீண்டும் நடிக்கும் வாய்ப்பு வடிவேலுக்குக் கிடைத்துள்ளது. 

தேவர் மகன் (1992), சிங்காரவேலன் (1992), மகாராசன் (1993), காதலா காதலா (1998) என கமலுடன் இணைந்து நான்குப் படங்களில் மட்டுமே நடித்துள்ளார் வடிவேலு. இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிப்பதற்காக லைகா நிறுவனத்திடமிருந்து வாங்கிய சம்பளத்துக்குப் பதிலாக இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார் வடிவேலு.  தலைவன் இருக்கிறான் படக்குழு குறித்த அதிகாரபூர்வத் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து

மெய்யன்Sep 25, 2019 - 10:31:25 PM | Posted IP 108.1*****

இந்த படத்துல கமல் நடிப்பாரா இல்ல படம் வெளியே வருமானே சந்தேகம், இதுல வடிவேலு வேற. பேஷ் பேஷ்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Black Forest Cakes



Thoothukudi Business Directory